அங்காளம்மன் கோவிலில் சக்தி கரக வழிபாடு ரத்து
ADDED :1607 days ago
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சித்திரை நள்ளிரவில் நடக்கும் சக்தி கரக வழிபாடு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். மாசி மாத தேர் திருவிழாவின்போதும், சித்திரை மாதத்தில் இரவு சக்திகரக வழிபாட்டின்போதும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது இல்லை. அமாவாசை தினமான நேற்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழாக்களுக்கு தடை உள்ளதால் சக்தி கரக வழிபாடும் நேற்று நடைபெறவில்லை. உற்சவர் அங்களம்மன், அமாவாசையை முன்னிட்டு ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவருக்கு கோவில் பூசாரிகள் சிறப்பு தீபாராதனை நடந்தினர். அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.