விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் அமாவாசை வழிபாடு
ADDED :1959 days ago
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் நேற்று அமாவசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவாரூர் அருகே விளமலில் மிகவும் பழமை வாய்ந்த பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. நேற்று அமாவாசையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனை நடைபெற்றது. வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.