உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி மக்கள் ஏரிகாத்தம்மனுக்கு நள்ளிரவு பூஜை!

மழை வேண்டி மக்கள் ஏரிகாத்தம்மனுக்கு நள்ளிரவு பூஜை!

வானூர்: மழை வேண்டி, தென் சிறுவளூர் கிராம மக்கள் ஏரிகாத்தம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம் கிளியனூர் அடுத்த தென்சிறுவளூர் கிராமத்தில் அதிகப்படியாக சவுக்கை பயிர் செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் ஏரியில் நிரம்பிய தண்ணீர், கடந்த ஆறு மாதங்களில் வறண்டு விட்டது.கோடை காலமான சித்திரை மாதத்தில் சில நாட்கள் மழை பெய்யும். ஆனால், இந்தாண்டு மழை பெய்ய தவறியதால் சவுக்கை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. வேறு பயிர் செய்வதற்கு, உழவு உழுவதற்கும் மழை இல்லாததால் கிராம மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதைத் தொடர்ந்து, தென்சிறுவளூர் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் திரண்டு வந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பூஜை செய்து விட்டு, அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஏரிக்கரைக்கு, 108 பால்குடங்கள் எடுத்து கொண்டு, தாரை தப்பட்டை, மேள தாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.அங்குள்ள ஏரிகாத்தம்மனுக்கு, மழை வேண்டி 108 பால்குடங்கள் அபி÷ஷகம் செய்து நள்ளிரவில் பூஜை முடித்து, வர்ண யாகம் செய்து அம்மனை வழிபட்டனர்.இது குறித்து முன்னாள் கவுன்சிலர் நாராயணன் கூறும்போது, "மழை பொய்த்து விட்டால், மழை பெய்ய வேண்டி ஏரிக்கரையில் உள்ள ஏரிக்காத்தம்மனுக்கு பால்குடம் எடுத்து பூஜை செய்வது வழக்கம். அடுத்த மூன்று நாட்களில் மழை பெய்யும் என்பது எங்கள் கிராம மக்களின் நம்பிக்கை. அதேபோல் மழை பெய்துள்ளது. இதனால், இந்தாண்டு மழை பெய்ய காலதாமதமானதால், அம்மனுக்கு பூஜை செய்து வழிப்பட்டோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !