அறநிலையத்துறை சார்பில் உணவு வினியோகம்
ADDED :1707 days ago
உடுமலை: அறநிலையத்துறை சார்பில், அரசு மருத்துவமனையிலுள்ள நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உடுமலை அரசு மருத்துவமனையில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் உடுமலை மாரியம்மன் கோவில் சார்பில், தினமும், 300 பேருக்கு உணவு வழங்கும் திட்டம் நேற்று துவங்கியது. அரசு மருத்துவமனை டாக்டர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.