தர்மபுரி திரவுபதியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :4965 days ago
தர்மபுரி: தர்மபுரி அன்னசாகரம் தண்டுபாதை தெரு திரவுபதியம்மன் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், ஸ்ரீருத்ர ஹோமம், மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர் தர்மகார்த்தா மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர் ரவி உட்பட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.