இனி இல்லை கடன் தொல்லை
ADDED :1721 days ago
லட்சுமியுடன் அருள்பெற்ற குபேரனை அவருக்குரிய வியாழக்கிழமையும், பூசநட்சத்திரம் கூடிய நாளில் வழிபடுவது சிறப்பு. அந்த நாளில் அஷ்டமி, நவமி திதி இருப்பது கூடாது. நாள் முழுவதும் அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் அமைய வேண்டும். இவரை வழிபடும் வீட்டில் கடன்தொல்லை ஏற்படாது. பழைய பொருட்களை வாங்கும் சூழ்நிலை உண்டாகாது. தண்ணீர் கஷ்டம் இருக்காது. சத்துள்ள சுவை மிக்க உணவுகள் கிடைக்கும். கவுரமான வாழ்க்கை அமையும்.