கடற்கரையில் அம்மன் சிலை கண்டெடுப்பு
ADDED :1573 days ago
நித்திரவிளை: நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை எடப்பாடு க டற்கரையில் நேற்று மதியம் இரண்டு அடி உயரம் கொண்ட கல்சிலை ஒன்று அலை அடிக்கும் வேளையில் தென்பட்டுள்ளது. இதை அப்பகுதியில் உள்ள படகு கட்டும் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளி ஜெகதீஷ் பார்த்துள்ளார். தொடர்ந்து அந்த சிலையை கடலிலிருந்து எடுத்து படகு கட்டும் பணியாளர்கள் தங்கும் வீட்டின் முன் வைத்துள்ளார். இது சம்பந்தமாக நித்திரவிளை காவல் நிலையத்திற்கும், வருவாய் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார். கடலில் அம்மன் சிலை கிடைத்த தகவல் அறிந்து பொதுமக்கள் சிலையை பார்த்து செல்கின்றனர்.