உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்று விழா நேற்றிரவு பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு யாகமும், இரவு கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் தினமும் காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:30 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள்பிரகார ஊர்வலம் நடக்கும். கொரோனா ஊரடங்கினால் வரும் 24ம் தேதி நடக்க இருந்த  தேர் திருவிழாவிற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. பிரம்மோற்சவத்தில் தினம் உற்சவதாரர்கள் நான்கு பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள்பிரகார ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !