மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1572 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1572 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1572 days ago
பல்லடம்: பல்லடத்தில், அறநிலைய துறை அறிவுறுத்தலின் பேரில், கோவில் அன்னதான திட்ட உணவு, நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.கடந்த, 2001 முதல், இந்து அறநிலைய துறைக்கு உட்பட்டு வருவாய் அதிகமுள்ள கோவில்களில், அன்னதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தினசரி, 25 முதல் 100 பேருக்கு சாப்பாடு என, கோவில்களின் தரத்துக்கு ஏற்ப மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக, கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், அன்னதான திட்டத்தை செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், அன்னதான திட்ட உணவை, அரசு மருத்துவமனை நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்க வேண்டும் என, அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த அய்யன் கோவிலிலும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் உத்தரவின் பேரில், இக்கோவிலில் வழங்கப்பட்டு வந்த அன்னதான திட்ட உணவு, பல்லடம் அரசு மருத்துவமனை, மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.இது குறித்து கோவில் ஊழியர்கள் கூறுகையில், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு, 70 மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, 30 என, அறநிலையத்துறை உதவி கமிஷனர் மேனகா அறிவுறுத்தலின்படி தினசரி உணவு வழங்கி வருகிறோம். இதுதவிர, கோவிலிலும் ஐம்பது பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. சாம்பார் சாதம், தக்காளி சாதம் என, தினசரி ஒவ்வொரு வகை உணவை கோவிலிலேயே சமைத்து வழங்கி வருகிறோம் என்றனர்.
1572 days ago
1572 days ago
1572 days ago