மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1572 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1572 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1572 days ago
நாமக்கல்: வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு நடந்த சிறப்பு அபிஷேக விழா நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தமிழகம் மட்டும் அல்லாமல், பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து, ஸ்வாமியை வழிபட்டுச் செல்வதை, வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு விசேஷ தினத்தன்றும், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்படி, நேற்று, வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, காலை, 10 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு, அபிஷேகம் செய்யப்பட்டது. காவி ஆடை அலங்காரத்தில் ஸ்வாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
1572 days ago
1572 days ago
1572 days ago