உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த ஜூன் 23ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து முதல் கால யாகசாலை, பூர்ணாஹூதி தீபாரதனை நடந்தது. ஜூன் 24ஆம் தேதி மங்கல இசை இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை, எந்திர ஸ்தாபனம் நடந்தது. நேற்று காலை நான்காம் யாக சாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை மற்றும் சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 11:00 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், கிட் அண்டு கிம் கல்லூரி சேர்மன் ஐயப்பன் மற்றும் காரைக்குடி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !