உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக விழா நிறுத்தம்

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக விழா நிறுத்தம்

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் கவலையடைந்தனர்.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு நேற்று காலையில் கொடியேற்றமும், மே 24ம் தேதி தேரோட்டமும் மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டது.இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:கடந்தாண்டும் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டதால் மிகவும் கவலையாக உள்ளது. சுவாமி தரிசனம் செய்ய முடியாதது வேதனையாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !