இன்று ஆதிசங்கரர் ஜெயந்தி
ADDED :1706 days ago
சனாதன தர்மமாகிய இந்து மதத்தில் ஒரு மாபெரும் எழுச்சிக்குரிய காலகட்டத்தை தோற்றுவித்த ஈசனுடைய அவதாரம். தஞ்சலியின் மறு அவதாரமாகிய கோவிந்த பகவத் பாதரை குருவாக ஏற்று அவர் காட்டிய வழியில் ஆத்மஞானம் பெற்றவர். ஷண்மத ஸ்தாபகர். அதாவது செளரம் காணாபத்யம் கௌமாரம் சைவம் வைணவம் சாக்தம் இந்து மதத்தின் ஆறு பிரிவுகளை நிறுவியவர். நம்முடைய இந்து சமுதாயத்தில் நிலவும் வைதிக வழிபாட்டின் மாபெரும் முன்னோடி. ஜகத்குரு ஆதிசங்கரர் இன்று அவரது நினைவைப் போற்றி அவரது அருளை வேண்டி இந்த உலகம் எதிர் கொண்டிருக்கின்ற பேரிடர் காலத்தை கடந்து வர அனைவருக்கும் ஆத்மபலத்தை அவர் இறைவனிடம் நமக்காக பெற்று தரவேண்டும்.