மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
1576 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
1576 days ago
கோவை:கோவையில் சேவா பாரதி, சேவாஸ்ரமம் மற்றும் சுவாமி விவேகானந்தா கேந்திரா அமைப்புகள் சார்பில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது.இது குறித்து, சேவா பாரதி அமைப்பின் தலைவர் ராமநாதன் கூறியதாவது: கடந்த முறை கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, ஆதரவற்றவர்களுக்கு தினமும் உணவு பொட்டலங்கள் வழங்கி வந்தோம். அதேபோல் இப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு மூன்று வேளையும், அவர்களின் வீடுகளுக்கே சென்று, குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் உணவு கொடுக்கிறோம். தினமும், 400 முதல், 500 பேர்களுக்கு உணவு தயாரித்து கொடுத்து வருகிறோம். தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் கோவை வந்துள்ளனர். அவர்கள், 40 பேருக்கும் உணவு கொடுத்து இருக்கிறோம். கொரோனா தொற்று முடிவுக்கு வரும் வரை, இந்த உதவிகளை தொடர்ந்து செய்ய இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.உணவு தேவைப்படுவோர், 89030 12987, 79048 43564, 86084 15240 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
1576 days ago
1576 days ago