வீடுகளில் வேப்பிலை தோரணம்
ADDED :1702 days ago
அன்னூர்: அன்னூரில், பல வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அன்னூர் வட்டாரத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து கிருமிநாசினியான வேப்பிலையை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அன்னூர் நகரில், மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் ஒட்டர்பாளையம் ஊராட்சியில், ஜீவா நகர், ஆயிமாபுதூர் உள்பட பல கிராமங்களில் வீடுகளில் வாசலில் வேப்பிலையை தோரணமாக கட்டி உள்ளனர். சில இடங்களில், கடை வாசல்களிலும் வேப்பிலையை கட்டியுள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கிருமிநாசினியான வேப்பிலையை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பரவலைத் தடுக்க முடியும் என்கிற எதிர்பார்ப்பில் வேப்பிலை கட்டப்பட்டுள்ளன.