மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
1598 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
1598 days ago
கடலுார் : கொரோனா ஊரடங்கால், கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலைச் சுற்றியுள்ள சாலையில், நேற்று ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், முகூர்த்த நாளான நேற்று, திருமணத்திற்காக ஏராளமானோர் பதிவு செய்திருந்தனர். கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, கோவில் மலையில் உள்ள மண்டபத்தில், திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.ஆனால், திருவந்திபுரம் கோவிலைச் சுற்றியுள்ள மண்டபங்களில் திருமணம் நடத்திக் கொள்ள, பதிவு செய்தவர்களை மட்டும், அதற்கான ரசீது உள்ளதா என சோதனை செய்து, போலீசார் அனுமதித்தனர்.மண்டபம் பதிவு செய்யாத ஜோடிகள், கோவிலைச் சுற்றியுள்ள சாலையில் நின்றபடி, வேத மந்திரம் முழங்க திருமணம் செய்து கொண்டனர்.
1598 days ago
1598 days ago