உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா

 கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா துவங்கியது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் 10 நாள் உற்சவமான வைகாசி பெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. தினமும் மாலை உற்சவர் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.6ம் நாளான வரும் 23ம் தேதி மாலை பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 26ம் தேதி தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களின்றி உற்சவம் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !