ஸ்ரீவி., ஆண்டாள் வசந்த உற்ஸவம்: 3ம்நாள் விழா
ADDED :1701 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்ஸவம் பக்தர்களின்றி துவங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் திருவேங்கடமுடையான் சன்னதியில் நடக்கும் வசந்த உற்ஸவம் ஊரடங்கால் ஆண்டாள் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. இதை முன்னிட்டு 3ம் நாள் விழாவாக ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்தனர். பத்து நாட்கள் நடக்கும் வசந்த உற்சவம் மே 26ல் நிறைவடைகிறது.