காஞ்சி மடம் சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி
ADDED :1701 days ago
சென்னை: காஞ்சி சங்கர மடத்தின் சார்பில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியுடன், ஸ்ரீ காஞ்சி காமகோடி தொண்டு அறக்கட்டளை சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, 25 லட்சம் ரூபாய்வழங்கப்பட்டது.மடத்தின் சார்பில், என்.சுந்தரேசன், மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபாலன்,டி.எஸ்.ராகவன் மற்றும் பம்மல் விஸ்வநாதன் ஆகியோர் இதை வழங்கினர்.