வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் வசந்த உற்சவம்
ADDED :1710 days ago
சேலம்: அக்னி வெயிலின் உக்கிரம் தணிந்து, நல்ல மழை பொழிய வேண்டி வசந்த விழா நடத்தப்படும். அதன்படி, சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும் இந்த விழா கொரோனாவால் இரு ஆண்டாக எளிமையாக நடத்தப்படுகிறது. 5 நாள் நடக்கும் விழாவில், முதல் நாளான நேற்று, பல வித காய்கனி, வெட்டிவேர் பந்தல் அமைத்து, அதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜரை எழுந்தருள செய்து, கொரோனாவில் இருந்து மக்களை காக்க, நல்ல மழை பொழிய வேண்டி, பட்டாச்சாரியார்கள், வேதபாரயணம் செய்தனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.