தவசிலிங்க சுவாமி கோயிலில் சுக்ர வார தரிசனம்
ADDED :1658 days ago
சிவகாசி: சிவகாசி அருகே மூளிப்பட்டியில் ஜமீனுக்கு சொந்தமான ஸ்ரீ தவசிலிங்க சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் சுக்ர வார தரிசனத்தை முன்னிட்டு, தவசிலிங்க சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில் குருக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்று நடத்தினார். ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.