காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி பூஜை
ADDED :1603 days ago
காரமடை : காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சுக்லபட்ச ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இக்கோவிலில் வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.