உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெருசலேம் வழிபாட்டு தலத்திற்குள் யூதர்களுக்கு அனுமதி

ஜெருசலேம் வழிபாட்டு தலத்திற்குள் யூதர்களுக்கு அனுமதி

ஜெருசலேம்: மேற்காசிய நாடான இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு யூதர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால், யூதர்கள் பெரும்பான்மையினராக உள்ள இஸ்ரேலுக்கும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது. ஜெருசலத்தில் உள்ள ஒரு வழிபாட்டு தலம் தொடர்பாக சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டது. அந்தப்பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் வெளியேற்றியது. இதையடுத்து, இஸ்ரேல் மீது, காசாவில் இருந்து, ஹமாஸ் படை யினர் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக, இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரச்னைக்கு காரணமான ஜெருசலேம் வழிபாட்டு தலத்திற்கு, 50 யூதர்களை போலீசார் நேற்று பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !