செல்வ விநாயகர் கோயிலில் வருசாபிஷேக விழா
ADDED :1605 days ago
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி செல்வ விநாயகர், அழகிய சுந்தர விநாயகர் கோயிலில் வருசாபிஷேக விழா நடந்தது. வருசாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதிஹோமம், கும்ப பூஜை நடந்தது. தொடர்ந்து கும்பம் எழுந்தருளல், விமான அபிஷேகமும், பின்னர் செல்வ விநாயகர், அழகிய சுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடந்தது. பூஜையை கண்ணன் ஐயங்கார், ராமன் ஆகியோர் நடத்தினர். நிகழ்ச்சியில் சைவ வேளாளர் சங்கதலைவர் சங்கரலிங்கம், செயலாளர் முருகன், லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் நடராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.