கொரோனா நீங்க வேண்டி காளஹஸ்தியில் முருத்யுஞ்சய ஜெபம்
ADDED :1656 days ago
ஆந்திரா: தற்போது உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று குறைந்து சாதாரண சூழ்நிலை நிலவ வேண்டும் என்று ஆந்திர மாநில அறநிலைத்துறை மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானத்தில் நாளை 25.05. 21 செவ்வாய்க் கிழமையில் இருந்து தினந்தோறும் காலை ஒன்பது மணியிலிருந்து கோயிலின் வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மூலம் முருத்யுஞ்சய ஜெபம் நடத்த உள்ளனர். இதில் ஆர்வம் உள்ள பக்தர்கள் மற்றும் நகர மக்கள் ஒவ்வொருவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் மீட் லிங்க் மூலம் பக்தர்கள் கலந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சி 25 .05. 21 தேதி முதல் தினந்தோறும் காலை 9 மணி முதல் நடக்கவுள்ளதாகவும் ஜூன் ஒன்றாம் தேதி வரை நடக்கும் என்று கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி. ராஜு தெரியப்படுத்தினார்.
Video link:
https://meet.google.com/fku-uzad-vom