பணப்பிரச்னை தீர...
ADDED :1878 days ago
முருகனுக்கு தெய்வானையை மணம் முடித்த போது, மாமனாரான தேவேந்திரன் சீதனமாக பொன்னும் பொருளும் பரிசளித்தார். அந்த பரிசுப்பொருட்களில் தேவலோகத்திலுள்ள ‘ஐராவதம்’ என்னும் வெள்ளை யானையும் இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இந்திரனின் செல்வச் செழிப்பு குறைய ஆரம்பித்தது. செல்வத்தின் அடையாளமான ஐராவதம், தன்னை விட்டுப் பிரிந்ததே இதற்கு காரணம் என்பதை உணர்ந்தார் இந்திரன். தன் மருமகன் முருகனிடம் ஆலோசித்து, யானையை தேவலோகம் இருக்கும் கிழக்கு திசை நோக்கி இருக்கச் செய்தார். அதன் பின் இந்திரனின் செல்வ வளம் அதிகரித்தது. இதனடிப்படையில் திருத்தணியில் கிழக்கு நோக்கி யானையை அமைத்துள்ளனர். கடன் பிரச்னையில் அவதிப்படுபவர்கள் இதை தரிசித்தால் பணப்பிரச்னை தீரும்.