புனிதமான வெள்ளிக்கிழமை
ADDED :1784 days ago
முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாள். அன்று ஐந்து வேளை தொழுகை நடத்துவார்கள். அன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்துள்ளார் நாயகம்.
‘‘குளித்து உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். முழுத்துாய்மையுடன் இருக்கும் பழக்கத்தை பேணி வாருங்கள். எவரேனும் வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்தால், அவர் குளித்து விட்டு வரட்டும். வாரத்தில் ஒரு முறையாவது தலையையும், உடலையும் கழுவி குளித்துக் கொள்வது இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமையாகும். இயன்றால் நறுமணம் பூசிக்கொள்ளவும் வேண்டும்’’ என்று கூறுகிறார்.