திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று வசந்த உற்சவம் நிறைவடைந்தது.சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் பெருமாள் கருடாழ்வார் $வாகனத்தில் எழுந்தருளி முதலை வாயில் சிக்கிய யானைக்கு மோட்சம் அளிக்கும் ‛கஜேந்திர மோட்சம்’ நிகழ்ச்சி ஐந்து நாள் உற்சவமாக வைகாசியில் வசந்தப்பெருவிழாவாக கொண்டாடப்படும். நேற்று ஐந்தாம் நாள் நடைபெற வேண்டிய கஜேந்திர மோட்சம் நடைபெறவில்லை. காலையில் உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிம்ம மண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம் நடந்தது. மாலையில் தங்கப் பல்லக்கில் தென்னை மரவீதியில் பெருமாள் வலம் வந்தார். கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கால் கோயில் வளாகத்தில் சம்பிரதாயமாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.