தவசிலிங்க சுவாமி கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை
ADDED :1598 days ago
விருதுநகர்: விருதுநகர் அருகே மூலிப்பட்டியில் மூலிப்பட்டி ஜமீனுக்கு சொந்தமான பழமை வாய்ந்த தவசிலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். கொரோனா தொற்று காரணமாக தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கவில்லை.