/
கோயில்கள் செய்திகள் / ஒரு கால பூஜை திட்டத்தில் தகுதி வாய்ந்த பூஜாரிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கிட கோரிக்கை
ஒரு கால பூஜை திட்டத்தில் தகுதி வாய்ந்த பூஜாரிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கிட கோரிக்கை
ADDED :1588 days ago
கடலாடி: கிராம கோயில் பூஜாரிகள் நலச்சங்கத்தின் மண்டல தலைவர் கடலாடியைச் சேர்ந்த ஆர். சண்முகசுந்தரம் கூறியதாவது; ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள கிராம கோயில்களில் பணிசெய்யும் பூஜாரிகளை முறையாக கண்டறிந்து தகுதி வாய்ந்த பூசாரிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டும். தற்போது கொரோனா இரண்டாம் அலை தொற்றால், வருமானமின்றி முடங்கியுள்ள கிராம கோயில் பூசாரிகளுக்கு அரசு கொரோனா நிதியாக ரூ.4000, மற்றும் 10 கிலோ அரிசி 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளனர். இவற்றினை ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உரிய கிராம கோயில் பூசாரிகளுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 640 கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் செயல்பட்டு வருகிறது என்றார்.