கொரோனா நீங்க ஸ்ரீவி., ஜீயர் சிறப்பு யாகம்
ADDED :1588 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: உலகில் கொரோனா நோய்த்தொற்று ஒழிந்து, மக்கள் நலமுடன் வாழ வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாளமாமுனிகள் சன்னதியில், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது. வேதபிரான் சுதர்சன் பட்டர் யாக பூஜைகள் செய்தார். பின்னர் மணவாளமாமுனிகள் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துறவியர் பேரவை அமைப்பாளர் சரவண கார்த்திக் உட்பட சிலர் பங்கேற்றனர்.