உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி ஆற்றுக்கால் விநாயகர் கோயில் பால்குடவிழா

சிங்கம்புணரி ஆற்றுக்கால் விநாயகர் கோயில் பால்குடவிழா

சிங்கம்புணரி ; சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் ஆற்றுக்கால் விநாயகர் கோயில் பால்குட விழா நடந்தது. இக்கோயிலின் தை மாத பாலாபிஷேக திருவிழா நேற்று நடந்தது. காலை 11:00 மணிக்கு சந்திவிநாயகர் கோயிலில் இருந்து ஏராளமானோர் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக பால்குடம் எடுத்துவந்தனர். ஆற்றுக்கால் விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து திருமஞ்சனம், சந்தனம் பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !