பழநி முருகன் கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு
ADDED :1574 days ago
பழநி : ஊரடங்கால் பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.பழநி பக்தர்கள் இங்குள்ள முருகன் கோயிலில் தினமும் வழிபட்ட பின்னரே அன்றாட வேலைகளை துவங்குவர். கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பக்தர்கள் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். ஊரடங்கு கட்டுப்பாடால் தொடர்ந்து திருவிழாக்கள் ரத்து செய்யப்படுவதாலும், கோயிலுக்குள் அனுமதி இல்லாததாலும் பலர் வெளிப்பகுதியில் நின்று கோபுர கலசத்தை வணங்கி செல்கின்றனர். நேற்று முகூர்த்த நாளை முன்னிட்டு கிரிவீதி பாத விநாயகர் கோயில், திரு ஆவினன்குடி கோயில் வாயிலில் பல திருமணங்கள் நடந்தது. மணமக்கள், பக்தர்கள் கோயிலின் வாயிலில் நின்று தரிசித்துச் சென்றனர்.