உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை

வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைக்க பூமி பூஜை

புதுச்சேரி: புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைப்பதற்கான பூஜை நேற்று நடந்தது. புதுச்சேரி, பாரதி வீதி – நேரு வீதி சந்திப்பு நெல்லுமண்டியில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் நிலைக்கல் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தற்காலிக சபாநாயகர் லட் சுமி நாராயணன், எதிர்க்கட்சித்தலைவர் சிவா ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கோவில் தலைவர் அப்பாசாமி, துணைத் தலைவர் சவுரி, பொருளாளர் சப்பந்தம், அபிராமி ரெசிடன்சி பாலு, தணிகாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !