உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதல் பரிகார பூஜை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதல் பரிகார பூஜை

மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு ப கவதி அம்மன் கோயிலில் தேவ பிரசன்னத்தை தொடர்ந்து முதல் பரிகாரமான மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கடந்த ௨ம் தே தி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை எரிந்து சேதமானது. இதை யடுத்து தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. இதில் முதல் பரிகாரமாக நேற்று மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. காலை 5.30 மணிக்கு சிறப்பு கணபதி ஹோமம், 9மணிக்குமிருத்யுஞ்சய ஹோமம், நண்பகல் 12மணிக்கு பரிகார கலசபூஜை மற்றும் நவக்கலச பூஜை, 1 மணிக்கு வழக்கமான உச்ச பூஜை நடந்தது. பிரசன்னத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மலையாளத்தில் குறிப்பு எழுதப்பட்டது. முழு தகவல்களும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இன்னும் ஓரிரு நாளில் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையருக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு நடத்த வேண்டிய பரிகார பூஜைகள், கட்டுமானங்கள் குறித்து ஆணையர் அலுவலகம் முடிவு செய்யும் என கோயில் நிர்வாக வட்டாரம் தெரிவித்து உள்ளது. இதில் தேவி சேவாசங்கம், பெரிய சக்கர தீவெட்டி முன்னேற்றக்குழு, ஸ்ரீதேவி கலா மன்றம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !