மக்கள் நலம் பெற வேண்டி நடத்திய மகா யாகம் நிறைவு
ADDED :1668 days ago
வடவள்ளி: மருதமலை அடிவாரத்தில், வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் நலம் பெற வேண்டி நடந்த மகா யாகம் நிறைவடைந்தது.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவும், மக்கள் அனைவரும் அனைத்து சவுபாக்கியங்களும் பெறவும் வேண்டி, மகா யாகம் மருதமலை அடிவாரத்தில் உள்ள வேல் கோட்டத்தில் நடந்தது. மகா யாகத்திற்கு, பகவான் சுவாமிகள் தலைமை தாங்கினார். கடந்த, 16ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன், மகா யாகம் துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள், காலையும், மாலையும் யாகங்கள் நடத்தி, சதுர்வேத பாராயணம், தமிழ் திருமுறை பாராயணம் நடந்தது. யாகங்களுக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்து வந்த மகா யாகம், நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.