உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் கோபுரத்தில் செடிகள்: சிலைகள் சேதம்

கோயில் கோபுரத்தில் செடிகள்: சிலைகள் சேதம்

திருவாடானை : கோயில் கோபுரத்தில் செடிகள் வளர்வதால் சிலைகள் சேதமடைந்துள்ளது.திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கும்பாபிேஷகத்தின் போது சிலைகள் புதுப்பிக்கபட்டு வர்ணம் தீட்டப்பட்டது. தற்போது கோபுரத்தில் பல்வேறு இடங்களில் செடிகள் வளர்ந்து வருகிறது. சிலைகள் சேதமடைந்துள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது- கோயில் உள்ளே மேல்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் விரிசல் பெரிதாகி வருகிறது.மழை காலத்தில் தண்ணீர் உள்ளே இறங்குவதால் பாதிப்பு ஏற்படுகிறது. செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !