சிறந்த பொக்கிஷம்
ADDED :1686 days ago
“நல்ல பெண்ணே சிறந்த பொக்கிஷம். அவள் கணவரின் குறிப்பறிந்து நடப்பாள். கணவரின் அன்புக்கட்டளைகளை ஏற்பாள். அவளை விட்டும் சென்று விட்டாலும் அவரை பாதுகாப்பாள்’’ என்கிறது இஸ்லாம்.
இதன் பொருள் என்ன?
கஷ்டமான சூழலிலும் மனைவி இன்முகத்துடன் செயல்பட்டால் வெளியே செல்லும் கணவர் வெற்றிச் செய்தியுடன் திரும்புவார். அவர் கட்டளைகளை ஏற்று பின்பற்றுவது அடிமைத்தனம் அல்ல. கணவர் சொன்னதை ஏற்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். ஒரு வேளை கணவரின் முடிவு துன்பத்தைத் தரும் என்றால் நேரம் பார்த்து எடுத்துச் சொல்லி நல்ல பெண் புரிய வைப்பாள். ‘விட்டுச் சென்று விட்டாலும் அவரைப் பாதுகாப்பாள்” என்பதிலுள்ள ‘அவரை’ என்பது புரியாமல் இருக்கலாம். கணவர் இல்லாத நேரத்தில் ‘அவருக்காகவே நான் இருக்கிறேன்’ என கற்புநெறியை பாதுகாப்பாள் எனப் பொருள் கொள்ள வேண்டும்.