அஸ்வமேத யாகம் செய்த பலன்
ADDED :1686 days ago
இந்தக் காலத்தில் அஸ்வமேத யாகம் செய்வது என்பது நடக்கக்கூடிய காரியமா என்றால் இல்லை. இந்த யாகம் செய்த பலனை அடைவதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலின் அனைத்து பிரகாரங்களையும் ஏழுமுறை சுற்றி வந்தால், அஸ்வமேத யாகம் செய்த பயன் கிடைக்கும் என தல வரலாறு சொல்கிறது.