தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
ADDED :1936 days ago
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி மாத, முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி மாத, முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.