உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடல்மங்கலம் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

கடல்மங்கலம் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

உத்திரமேரூர்: கடல்மங்கலம் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்நேற்று விமரிசையாக நடந்தது.


உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலத்தில் வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான இக்கோவிலில் திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 1ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 11:00 மணிக்கு கலசம் புறப்பாடு நடந்தது. வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தி வைத்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !