முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கருட சேவை
ADDED :3 minutes ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 55வது ஆண்டு திருப்பவித்ரோற்சவ விழா நடந்து வருகிறது. இவ் விழாவையொட்டி, நேற்று சுவாமிக்கு சாற்றுமுறை, பவித்ரோற்சவம் பூர்த்தி நடந்தது. தொடர்ந்து, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. லட்சுமி ஹயக்ரீவர் சுவாமி கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உட்பட ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.