வேட்டைக்கொருமகன் சன்னதியில் 3336 தேங்காய்கள் உடைத்து பக்தர்கள் வழிபாடு
ADDED :40 minutes ago
திருச்சி: திருச்சி முத்தரசநல்லூரில் அமைய பெற்றுள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோவிலில் பிரதிஷ்டா தினம் எனப்படும் சம்வத்ஸராதின மஹோத்சவ விழா கடந்த 29ம் தேதி ஸ்ரீ சக்கர பூஜை, ஸ்ரீ நித்தியபூஜை மற்றும் கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவபெருமானின் அவதாரமாக கருதப்படும் காவல்தெய்வமான வேட்டைக்கொரு மகன் கேரளாவில் பிரசித்தி பெற்றதாகவும் விளங்கும் வேட்டைகொரு மகனின் வேண்டுதல்களை நிறைவேற்றவும், தடைகள் நீங்குவதற்காகவும் இன்றைய தினம் வேட்டைகொரு மகனின் சன்னதி முன்பு, கேரளா சம்பிரதாயத்தின் படி நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நம்பூதரி ஒருவர் பக்தர்கள் வேண்டுதலுக்காக அளித்த 3336 தேங்காய்களை உடைத்தார், இதன்மூலம் பக்தர்களின் தீவினைகள் ஒழிவதுடன், யோசிங்கள் நீங்கியதாகவும் எண்ணி வேட்டைக்கொரு மகனையும், குருவாயூரப்பனையும் வழிபட்டு சென்றனர்.