/
கோயில்கள் செய்திகள் / காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமில்லை ; கோதண்டராமர் கோவிலில் சொற்பொழிவு
காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமில்லை ; கோதண்டராமர் கோவிலில் சொற்பொழிவு
ADDED :30 minutes ago
கோவை: ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமர் தேவஸ்தானத்தில் நேற்று ஸ்ரீமந்நாராயணீயத்தில் வாமன அவதாரம் ஸ்ரீ ராம வைபவம் குறித்து தாமல் ராமகிருஷ்ணன் சொற்பொழிவு நிகழ்த்தியதாவது:
காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரம் உலகில் எங்கேயும் இல்லை. அதே போல் பெற்ற தாய்க்கு மிஞ்சிய தெய்வம் உலகில் எங்கேயும் இல்லை. காயத்ரி மந்திரத்தை அன்றாடம் சரியாக உச்சரித்து பாராயணம் செய்ய வேண்டும். இதன் வாயிலாக ஆயுள், ஆரோக்கியத்தையும், சிறப்பான வளத்தையும், நல்ல முன்னேற்றத்தையும் அடையலாம். இவ்வாறு, ராமகிருஷ்ணன் சொற்பொழிவு நிகழ்த்தினார். இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெனனமும், ருக்மிணி கல்யாணமும் மிக விமரிசையான நிகழ்ச்சியாக நடக்கிறது.