உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் வேண்டுகோள்

ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் வேண்டுகோள்

 மதுரை:அர்ச்சகர்களுக்கான உதவித்தொகையில் உள்ள முரண்களை தமிழக அரசு களைய வேண்டும், என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் வலியுறுத்தியுள்ளது.


இச்சங்க அகில இந்திய துணைத்தலைவர்கள் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார், சிவ சங்கர சர்மா அறிக்கை:தமிழக அரசின் உதவித்தொகை தற்காலிக, குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கும் கிடைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.முதன்மையான கோயில்களை தவிர்த்து பிற கோயில்களில் ஓதுவார்கள் இல்லை. அர்ச்சகர்களே ஓதுவார் பணியும் செய்கின்றனர். இவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்குவதுடன் ஓதுவா மூர்த்திகளையும் நியமிக்க வேண்டும். கொரோனாவிற்கு பலியான அர்ச்சகர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நிவாரணத்தொகை, அரசுப் பணி வழங்க வேண்டும்.பக்தர்களுக்கு பசு சாண விபூதி வழங்கவும், கோயில் குளங்களை துார்வாரி, தெப்போற்சவம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பாபிேஷகத்தை மரபு மாறாமல் நடத்த வேண்டும்.பிரமோற்சவங்கள் தடைப்பட்ட கோயில்களில் உரிய பிராயச்சித்த அபிஷேகங்கள் செய்து உற்சவங்களை நடத்திட வேண்டும். கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !