உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனுார் வரதராஜப்பெருமாள் பிரம்மோற்சவ விழா: சுவாமி உள் புறப்பாடு

வில்லியனுார் வரதராஜப்பெருமாள் பிரம்மோற்சவ விழா: சுவாமி உள் புறப்பாடு

வில்லியனுார்: வில்லியனுார் வரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ஆறாம் நாள் விழாவில் சுவாமி உள் புறப்பாடு நடந்தது. வில்லியனுாரில் பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் 17ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா க டந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்து ச மய அறநிலையத்துறை அறிவுறுத்தல்படி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பக்தர்கள் பங்கேற்பின்றி, விழா நடை பெற்றுவருகிறது. நேற்று ஆறாம் நாள் விழாவில், காலையில் சிறப்பு திருமஞ்சனம், அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள்புறப்பாடு நடந்தது. விழாவில் சிவா எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ராமதாஸ் தலைமையில் உற்சவதாரர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !