ஆனி ஊஞ்சல் உற்சவம்: வெள்ளி குதிரை வாகனத்தில் சுந்தரேஸ்வரர் உலா
ADDED :1834 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில்10ம் நாளான நேற்று நூறுகால் மண்டபத்தில் அலங்காரத்தில் அம்மன், வெள்ளி குதிரை வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தனர். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோயில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி விழா நடத்தப்பட்டு வருகிறது.