சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பவுர்ணமி வழிபாடு
ADDED :1662 days ago
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி பவுர்ணமி வழிபாடு பக்தர்களின்றி நடந்தது.இதை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகளை கோயில் அர்ச்சகர்கள் செய்தனர். ஊரடங்கின் காரணமாக பக்தர்கள் அனுமதிக்காத நிலையில், சுற்று கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் தாணிப்பாறை கேட்டின் முன்பு சூடம் ஏந்தி மலையை நோக்கி வணங்கினர்.