கிராம கோயில் பூஜாரிகளுக்கு நிவாரணம்
ADDED :1652 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கிராம கோயில் பூஜாரிகளுக்கு கொரோனா நிவாரண பொருள் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் (திருப்புத்தூர்) தமிழரசி இத்தாலுகாவை சேர்ந்த 80 கிராம கோயில்களில் ஒரு கால பூஜை செய்யும் பூஜகர்களுக்கு அரசின் 14 மளிகை பொருட்கள் தொகுப்பு மற்றும் 10 கிலோ அரிசியை வழங்கினார். நிவாரண நிதியாக 4000 ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேவுகப்பெருமாள் கோயில் சூப்பிரண்டு ஜெய்கணேஷ், கரிகாலன், கலைச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.