உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வம் இருப்பது எங்கே

தெய்வம் இருப்பது எங்கே

* தர்மம் இருக்குமிடத்தில் தான் தெய்வம் குடிகொண்டிருக்கும்.
* தர்மத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் மற்ற நல்ல விஷயங்களில் நம்பிக்கை ஏற்படாது.
* வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க உதவும் தோணி தர்மம் ஒன்றே.
* தர்மத்தை முழுமையாக ஏற்று வாழ்வதே கல்வி கற்றதன் அடையாளம்.
* தர்ம வழியில் சம்பாதிப்பதோடு வேதம் விதித்தபடி நல்வாழ்வு நடத்துங்கள்.
* புத்தியால் மனதை அடக்கியாள்பவன் வெற்றி இலக்கை அடைவான்.
* கோபத்தை கைவிட்ட மனிதனை துன்பங்கள் நெருங்குவதில்லை.
* உயிருள்ள வரை உடன் பிறந்த குணங்கள் ஒருவனை விட்டு நீங்காது.
* பிறருடைய குற்றங்களை மன்னிப்பவன் மனிதன். மறப்பவனோ தெய்வம்.
* லட்சியத்தை அடைய எண்ணம், சொல், செயலைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
* கலியுகத்தில் கடவுளின் பெயரைச் சொன்னாலே போதும். எல்லா நன்மைகளும் சேரும்.
* தேவையற்ற பேச்சால் நேரம் வீணாகும். திட்டமிட்ட செயல்களும் நிறைவேறாது.   
* பேராசை வளரத் தொடங்கினால் அறிவாளியும் முட்டாள் ஆகி விவான்.
* தீய ஆசைகளால் துாண்டப்பட்டவன் தனக்குத் தானே அழிவைத் தேடுகிறான்.   
* புலன்களின் கவர்ச்சியானது நல்ல அறிஞர்களைக் கூட தடுமாறச் செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !